அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட மேலதிக காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய டிசம்பர் மாதம் 9ம் திதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரியச் சபை அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அஸ்வெசும கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்காத குடும்பத்தினர் அல்லது தனிநபர்களுக்கு கடந்த 25ம் திகதி முதல் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.