அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு பணியகத்தை அகற்ற வேண்டுமென டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான எலன் மஸ்க் பரிந்துரைத்துள்ளார்.
மோசடியான நிதி நடைமுறையிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கூட்டாட்சி அமைப்பொன்றை அமெரிக்காவில் ஸ்தாபிப்பது தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகரான எலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற திட்டத்திற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து எலோன் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நுகர்வோர் நிதி பாதுகாப்பு பணியகத்தை முடிவுக்கு கொண்டுவர ஆதரவு தெரிவிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.