மலையக ரயில் தண்டவாளங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், புதன்கிழமை (27) இயக்கப்படவிருந்த கொழும்பு – பதுளை மற்றும் பதுளை – கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரையான புகையிரத பாதையில் இயங்கும் புகையிரதம் இரண்டாவது நாளாக இன்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.