நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களின் உள்ள பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவா இன்று (27) தெரிவித்தார்.
மேலும், சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கமைய, கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ, மெத தும்பர, கங்கபட கோரலய, உடுதும்பர டோலுவ, யட்டி கண்டி, உடு தும்பர, பாத ஹேவாஹட, தெல்தோட்டை, பாததும்பர, வில்கமுவ, அம்பகமுவ, அம்பகமுவ கோறளை, இரத்தோட்டை, நாவுல, உக்குவளை போன்ற பிரதேசங்களோடு நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேசத்திலும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச மக்கள் விரைவில் அந்த இடங்களை விட்டு வெளியேறுவது முக்கியம் எனவும், அவர்களை வெளியேற்றுவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொலிஸ், இராணுவம் மற்றும் பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.