நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கான உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறமாட்டாதென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய 27, 28 மற்றும் 29ம் திகதிகளில் பரீட்சைகள் இடம்பெறமாட்டாது. 30ம் திகதி பரீட்சைகள் வழமைப் போன்று இடம்பெறுமெனவும் அன்றைய தினத்திற்கான அட்டவணைக்கமைய பரீட்சை இடம்பெறுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் பரீட்சைகள் இடம்பெறாத குறித்த 3 தினங்களுக்கான பரீட்சைகளின் வினாத்தாள்களை மீண்டும் மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் செயற்பாடு டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.