பாதுக்க-வட்டரெக்க பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஒரு தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
57 கிலோ ஐஸ் போதைப்பொருளும் 29 கிலோ ஹெரோயின் போதைப்பொருளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை மற்றும் தலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்த 41 மற்றும் 37 வயதுடைய இரு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.