ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை நிதி திட்டமிடல் பொருளாதார அமைச்சின் கீழ் கொண்டுவரும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 25ம் திகதியிடப்பட்ட , ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டத்தினை கைவிடும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டத்தினை கைவிட்டு இலாபமீட்டக்கூடியதாக அதனை மறுசீரமைக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார் என ஓகஸ்ட் மாதத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.