அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2020-ம் ஆண்டு அதிபர் தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அதிபர் தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீதான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவர் அளித்த மனுவில், அதிபரிடம் விசாரணை நடத்த அமெரிக்க நீதித் துறைக் கொள்கையில் அனுமதி இல்லை என தெரிவித்து இருந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிரம்ப் மீதான குற்ற வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சமீபத்தில், டிரம்ப் மீதான அரசின் ரகசிய ஆவணங்களைச் சேமித்து வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.