பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முடக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி நாடு தழுவிய ரீதியில் பல்வேறு வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இம்ரான்கானின் ஆதரவாளர்களால் இஸ்லாமாபாத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியைத் தடுக்கும் வகையில் இஸ்லாமாபாத் நகர் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.