2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மெகா ஏலத்தில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான வனிந்து ஹசரங்க மற்றும் தீக்ஷன ஆகியோர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளனர்.
இதன்படி வனிந்து ஹசரங்க 5.25 கோடி இந்திய ரூபாய்க்கும், தீக்ஷன 4.40 கோடி இந்திய ரூபாய்க்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளனர்.