தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், திட்டமிட்ட பல்வேறு செயற்பாடுகளை எதிர்வரும் வருடத்தில் முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.