450 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி படகு மாலைத்தீவு கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டது.
குறித்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 05 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மாலைத்தீவு கடலோர பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.