தொழிற் கல்வியானது பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பை வழங்குவதால் பாடசாலைக் கல்வி முதல் உயர் கல்வி வரை சிறப்பான எதிர்காலத்தை அடையக்கூடிய ஒரு தெரிவாக அது அமைய வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மக்கள் எமது கொள்கைகள் தொடர்பில் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்.
அவற்றை செயற்படுத்தவேண்டுமானால் நிறுவன ரீதியான வியூக மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.