கடந்த வாரம் பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து வீதியில் விழுந்தமையினால் கடந்த 6 நாட்களாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களின் துரித முயற்சியால் கற்பாறைகள் அகற்றப்பட்டு இன்று (24) மதியம் 12.00 மணியளவில் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து ஒற்றை வழி போக்குவரத்தாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 6.00 மணிக்கு மேல் அவ்விடத்தில் வீதி மூடப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த வீதியின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகளும் பொதுமக்களும் மிகவும் அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.