கொட்டகலை நகருக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதார பாதுகாப்புடனான உணவுகள் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தால் திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கொட்டகலை பிரதேச சபையிடம் வர்த்தக அனுமதிப் பத்திரம் பெறாமல், சுகாதாரமற்ற முறையில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை நடத்திவந்த 18 உரிமையாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதன்போது சுகாதார பாதுகாப்பற்ற பல உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.