கொட்டகலை நகரில் சுகாதார நடைமுறைகளை மீறும் வகையிலான வியாபார செயற்பாடுகளில் ஈடுபட்ட 18 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிகளினால் திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கொட்டகலை பிரதேச சபையிடம் வர்த்தக அனுமதிப் பத்திரம் பெறாமல், சுகாதாரமற்ற முறையில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை நடத்திய 18 உரிமையாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.