பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் நேற்று குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் 7 பேரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வந்த நிலையில் இருவர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஏனைய 5 பேரும் தொடர்ந்தும் சிசிக்கை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.