எதிர்வரும் பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை இந்தச் சோதனை நடவடிக்கைகள் தொடரும் எனவும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை காட்சிப்படுத்துவதில் அவதானத்துடன் சோதனைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் வாடிக்கையாளர்கள் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.