களனி-பதலஹேனவத்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
களனி பொலிஸ் நிலைய அதிகாரிகள் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார்.
இதன்போது கைதான சந்கேதநபரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 516 கிராமும், 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.