இந்தியாவின் லக்னோவ் நகரின் குடிசைகளில் வசிக்கும் பெண் பிள்ளைகள் இணைந்து நடத்திய Fashion Show சமூக வலைத்தளத்தில் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.
பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியுள்ளனர். அவர்களின் குறித்த செயற்பாடு புகைப்படமெடுக்கப்பட்டு இணையளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அதனை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
12 முதல் 17 வயதிற்கிடைப்பட்ட பெண் மற்றும் ஆண் பிள்ளைகளின் இந்த Fashion Show இல் பங்கேற்றிருந்தனர். அவர்கள் நடத்திய இந்த பெஷன் ஷோவினை 15 வயதுடைய சிறுவனே ஒளிப்பதிவு செய்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிலுள்ள அரச சார்பற்ற தன்னார்வ நிறுவனமொன்றின் சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான புகைப்படங்கள் முதலில் வெளியாகின. லக்னோவ் குடிசைவாசிகளின் உணவுக்காக இந்த நிறுவனம் தொண்டு பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
குறித்த பகுதியில் 400க்கும் அதிகமான சிறுவர்கள் வசிக்கின்றனர்.