மினுவாங்கொடை நகரில் 7 கோடி ரூபா பணத்ழைத கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கு பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
அவர்கள் இருவரும் கம்பஹா பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் 071 859 16 08 அல்லது 071 859 16 10 தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.