லெபனான் தலைநகர் பேய்ரூட்டின் மத்திய பகுதியில் குடியிருப்பு கட்டிடமொன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் பாரிய வான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர். 8 மாடிகளைக் கொண்ட குடியிருப்புக் கட்டிடம் தாக்குதலில் முழுமையாக சேதமடைந்துள்ளது. ஐந்து ஏவுகணைகள் கட்டிடத்தை தாக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் இராணுவம்இதுவரை எவ்வித பதிலையும் வழங்கவில்லை.