பதுளை – துன்ஹிந்த பகுதியில் அண்மையில், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில் காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த மற்றுமொரு மாணவர் உயிரிழந்தார்.
ஜோன் கொத்தலாவ பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் முன்னதாக 2 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.