அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு அறிவித்துள்ளது.
இந்த இணக்கப்பாட்டு ஒப்பந்தம் நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் நான்காம் கட்ட கடன் வழங்கப்படும் என்றும் நான்காம் கட்ட கடனாக இலங்கைக்கு 330 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், உயர்மட்ட அரச அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்தது.