பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது பல சிறுவர்கள் டிஜிட்டல் திரைகளின் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ள நிலையில், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, சிறுவர்கள் மீதான தங்களது பொறுப்பு குறித்துப் பெற்றோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.