கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.
இதேவேளை, பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக உயர்தரப் பரீட்சைக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக தொடர்புடைய திணைக்களங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.