நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில், சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் ராஜகிரியவிலுள்ள தேசிய ஒருமைப்பாட்டுப் பிரிவின் அலுவலகத்தில் நேற்று (22) இந்நிகழ்வு நடைபெற்றது.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் இத்திட்டத்துக்கு முழுமையான அனுசரனை வழங்கியுள்ளது. இங்கு 61 மடிக்கணினிகள் உள்ளிட்ட தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் தேசிய ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் மொஹமது முனீர் உட்பட அமைச்சு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.