குவைத்தில் பணிபுரியும் அனைத்து இலங்கை பணியாளர்களும் உள்துறை அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கைரேகையை வழங்காத வெளிநாட்டினரின் அனைத்து அரசு மற்றும் வங்கி நடவடிக்கைகளும் தடைபடும் என “தி டைம்ஸ் குவைத்” நாளிதழில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31ஆம் திகதி வரை கைரேகைகளை வழங்குவதற்கான கடைசி திகதி முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, குவைத் நாட்டைச் சேர்ந்த “சாஹெல்” செயலியைப் பயன்படுத்தியோ அல்லது “மெட்டா” மின்னணு முறை மூலமாகவோ கை விரல் அடையாளத்தை உறுதிப்படுத்தி கைரேகையை பதிவு செய்யலாம்.
மேலும், இணைய முறையில் கைரேகைகள் பதிய ஹவாலி, ஃபர்வானியா, அஹ்மத், முபாரக் அல் கபீர், ஜஹ்ரா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு இயக்குனர் அலுவலகங்களில் இது வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தவிர, அலி சபா அல் சலீம், உம் அல்-ஹைமன் மற்றும் ஜஹ்ரா பகுதிகளில் அமைந்துள்ள நபர்களின் புலனாய்வு பிரிவு அலுவலகங்களில் கைரேகையை மேற்கொள்ளலாம்.