ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த ஜப்பானிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை திறம்பட தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டை பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் புதிய கொள்கைக்கு ஜப்பான் அரசாங்கத்தின் பாராட்டுக்களையும் இதன்போது தெரிவித்தார்.