குவைத்தில் பணிபுரியும் அனைத்து இலங்கை பணியாளர்களும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் இலத்திரனியல் கைரேகைகளை பதிவு செய்துக் கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
குவைத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டு பணியாளர்களும் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னதாக கைரேகையை பதிவு செய்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கைரேகையை பதிவு செய்யாத பணியாளர்களின் அரச மற்றும் வங்கி நடவடிக்கைகள் தடைப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.