பத்தரமுல்லையிலிருந்து கொஸ்வத்த நோக்கிப் பயணித்த காரொன்று திடீரென தீ பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரின் முன்பகுதியில் இருந்து சிறிது புகை வெளியேறிய பின்னர் கார் தீப்பற்றி எரிந்துள்ளது.
தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதும், கார் முற்றாக சேதமடைந்துள்ளது.
கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினரால் இந்த தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.