கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சையை பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வினாத்தாள்கள் அச்சிடுதல், பரீட்சை நிலையங்களை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது பரீட்சையை ஒத்திவைக்குமாறு சில தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பரீட்சை ஒத்திவைக்கப்பட்டால், எதிர்வரும் பரீட்சைகள் அனைத்தும் பாதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.