ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி கல்விசாரா ஊழியர்கள் கடந்த 19ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.
பல்கலைக்கழக உபவேந்தரை அப்பதவியில் இருந்து நீக்கும் வரை தனது பணிப்புறக்கணிப்பை கைவிடப் போவதில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு, பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் அண்மையில் கலந்துரையாடலொன்றினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.