தற்போது ரஜினியுடன் கூலி படத்தில் நடிகர் சத்தியராஜ் நடித்து வருகிறார்.
பல வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி இந்தப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் இடம்பெறுகின்றன.
படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன், சத்யராஜ் தற்போது இணைந்து நடித்து வருகிறார்.
இதனையடுத்து தனக்கு என்ன வயசு என ரஜினிகாந்த் கேட்டதாகவும் 70 வயது என தான் கூற அதைக்கேட்ட ரஜினிகாந்த் ஷாக்கானதாகவும் சத்யராஜ் கூறியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 171வது படமாக கூலி உருவாகி வருகிறது.
படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். அமீர்கானும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
படம் அடுத்த வருடம் மே மாதத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.