அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்திசெய்த முதியோருக்கான உதவித் தொகையை இன்று (22) முதல் அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிட நலன்புரி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய இன்றுமுதல் முதியோர் கொடுப்பனவாக 3,000 ரூபாவை வைப்பிலிடவுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் கீழ் 5 இலட்சத்து 11 ஆயிரத்து 86 பேருக்கு இத்தொகையை வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.