ஐக்கிய மக்கள் சக்தியின்மிகுதி தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் இன்று (22) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் இன்று எடுக்கப்படும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி 5 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வென்றுள்ளதுடன், அதில் ஒரு இடத்திற்கு செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, எஞ்சிய 4 தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான பெயர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என பேச்சாளர் மேலும் தெரிவித்தார்