பிரபல இந்திய திரைப்பட நடிகர் மோகன்லால் இலங்கை வந்துள்ளதுடன் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டியுடன் இணைந்து நடிக்கவுள்ள திரைப்படத்தின் காட்சிகளின் படப்பிடிப்புகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.
இலங்கையின் குறிப்பிட்ட சில இடங்களில் படப்பிடிப்புகள் இடம்பெறவுள்ளன. 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இரு முன்னணி திரைப் பிரபலங்களும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றமை விசேட அம்சமாகும்.
குறித்த திரைப்படத்திற்கான தற்காலிகமாக ‘மெகாஸ்டார் 429’ என தலைப்பிடப்பட்டுள்ளது.