இந்திய முன்னணி பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி மீது அமெரிக்காவில் நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இலஞ்சத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் அதனை மறைத்து அமெரிக்காவில் பணம் ஈட்டியுள்ளதாக அதானி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நிவ் யோர்க் நீதிமன்றில் அவருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி தனது வியாபார சாம்ராச்சியத்தை விரிவுபடுத்தும் வகையில் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் புதுப்பிக்கத்தக்க சக்திவளங்கள் தொடர்பிலான முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றார்.
அதானியின் புதுப்பிக்கத்தக்க சக்திவள நிறுவனத்திற்கான ஒப்பந்தங்களை வென்றெடுப்பதற்கு இந்திய அதிகாரிகளுக்கு கடந்த 20 வருடங்களில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக தொகையை இலஞ்சமாக வழங்கியுள்ளதாக குற்றப் பத்திரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்ட தொடர்பில் அதானி தரப்பிலிருந்து இதுவரை எவ்வித பதிலும் முன்வைக்கப்படவில்லை.