சில தரப்பினரின் தலையீட்டினால் தென்கொரியாவில் பருவகால வேலைவாய்ப்புக்கான E-8 விசாவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையிலிருந்து விலகி செயற்படுவதன் காரணமாக வேலைக்கென அங்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ள தரப்பினர் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை தொடர்பில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் விஜித ஹேரத்திற்கு கவனத்திற்க கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்றைய தினம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அமைச்சர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். விசேட கலந்துரையாடலிலும் அவர் ஈடுபட்டார்.
தென்கொரியாவில் விசா முறையின் கீழ் பணியாளர்களை பரிந்துரைப்பது குறித்து ஆழமாக ஆராயுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கான சட்ட வரம்புகளை கண்டறிந்து அதற்கமைய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.