சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்த 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நிக்கவெரட்டிய, கொலன்ன, ஹபராதுவ, இங்கினியாகல மற்றும் பொத்துவில் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
19, 29, 36, 53 மற்றும் 60 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.