இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அணித்தலைவர் டெம்பா பவுமா உள்ளிட்ட 14 வீரர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர், ஐ.சி.சி உலக செம்பியன்ஷிப்பின் கீழும் டெஸ்ட் நடைபெறவுள்ளதுடன், இதன் முதல் போட்டி இம்மாதம் 27ம் திகதி டர்பனில் ஆரம்பமாகவுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி விபரம்
டெம்பா பவுமா (தலைவர்), டேவிட் பெடிங்ஹாம், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி சோர்சி, மார்கோ ஜென்சன், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கிள்டன், கைல் வெரீன்