தெல்தெனிய, மெதமஹனுவர வத்துலியத்த கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கல்லவத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 வயதான டி.எம். செனாரா தில்ஷன் என்ற மாணவனை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இன்று (20) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மாணவன் சுவர்களுக்கு இடையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.