கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பதுளை அராவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.
இவர் மேலும் சில நபர்களுடன் இணைந்து கட்டிடத்தை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டிடத்தின் சுவர் ஒன்று இவர் மீது இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கட்டிடத்தின் ஒப்பந்தக்காரரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு ஆகியவையே இந்த மரணத்திற்குக் காரணம் என பணியாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரான 24 வயதுடைய கட்டட ஒப்பந்தக்காரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.