இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 21 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போட்டியில் மழை குறுக்கிட்டது.
இந்நிலையில் மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்கமைய மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.