நாட்டில் நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த எச்சரிக்கை இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மட்டம் ஒன்றின் கீழ் களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட பகுதிக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே, பலங்கொடை, இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல உள்ளிட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டம் இரண்டின் கீழ் கேகாலை மாவட்டத்தின் புலத்கோஹ்பிட்டிய, வரக்காபொல, ருவன்வெல்ல மற்றும் யட்டியந்தொட்டை ஆகிய பகுதிகளுக்கும் குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல, ரிதிகம மற்றும் அலவ்வ ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.