பிரதமரின் செயலாளர் , அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட 16 அமைச்சுக்களின் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் சனத் குமாநாயக்க தலைமையில் செயலாளர்கள் நியமனம் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
பிரதமரின் செயலாளர் – ஜீ.பீ.சப்புதந்த்ரி
அமைச்சரவை செயலாளர் – டபிள்யு.எம்.டீ.ஜே.பெர்னான்டோ
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் – சிரேஷ்ட பேராசிரியர் கபில.சீ.கே.பெரேரா
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியமைச்சின் செயலாளர் – கே.எம்.எம்.சிறிவர்தன
கைத்தொழில், தொழில் முயற்சியாண்மை அமைச்சின் செயலாளர் – ஜே.எம்.திலகா ஜயசுந்தர
புத்தசாசன , மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் – ஏ.எம்.பீ.எம்.பீ.அத்தபத்து
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் – பீ.கே.பிரபாத் சந்திரசிறி
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் – எச்.எஸ்.எஸ்.துய்யகொன்னா
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் – ஆர்.பீ.செனவிரத்ன
நகர அபிவிருத்தி. நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் – யூ.ஜீ.ரன்ஜித் ஆரியரத்ன
எரிசக்தி அமைச்சின் செயலாளர் – கே.டி.எம்.உதயங்க ஹேமபால