புதிய மெகசின் சிறைச்சாலையில் கைதியொருவரை பார்ப்பதற்காக வந்த பெண்ணொருவர் கைதிக்கு வழங்குவதற்காக கொண்டு வந்திருந்த உணவு பொதியில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
பராட்டா உணவுப் பொதியில் 10 கிராம் கொண்ட 3 பெக்கட்டுக்களில் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பெண்ணை கைதுசெய்தனர்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொரள்ளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.