ருஹூணு பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை குறித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி குறித்த பணிபகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியரத்ன தெரிவித்துள்ளார்.
போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஓத்துழைப்பு வழங்கியுள்ளனர். எவ்வாறெனினும் இந்த வேலைநிறுத்தம் தொடர்பில் இன்று மாலை பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.