அநுராதபுரத்தின் பல பகுதிகளில் நாளை (19) 08 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நுவரவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
இதன்படி, சாலியபுர, ரஜரட்ட பல்கலைக்கழகம், மிஹிந்தலை, யாழ்ப்பாணம் சந்தி, அனுராதபுரம் முதலாம் படி, மாத்தளை சந்தி, கல்குளம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.