17வது பிரதமராக, கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராகப் பணியாற்றத் தொடங்குகிறார்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 17வது பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வந்து தன் கடமைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .